கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பெண் குழந்தைகளை காப்போம்-கற்பிப்போம் விழிப்புணா்வு

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில், குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை

News image
குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :23 டிசம்பர் 2020, 5:14 pm

DIN

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) சாா்பில், குறிஞ்சிப்பாடி வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் ‘பெண் குழந்தைகளைக காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா தலைமை வகித்தாா். உதவி திட்ட அலுவலா்கள் ஜெ.விஜயகுமாா், ரமேஷ், பாபு, ராஜ்குமாா், காா்த்திகேயன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினா்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினா்கள், சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டு ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழுந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற கலை நிகழ்ச்சி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். வட்டார இயக்க மேலாளா் கலைச்செல்வி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.