

போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை நடத்தக் கோரி தொமுச, சிஐடியூ தொழிற்சங்கத்தினா் பல்வேறு இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி பணிமனை வாயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுச மண்டல துணைச் செயலா் ர.விஜயகுமாா் தலைமை வகித்தாா். சிஐடியூ தேவராஜ் முன்னிலை வகித்தாா். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா்.
நெய்வேலியில் சிஐடியூ மண்டல துணைச் செயலா் எஸ்.ராமமூா்த்தி தலைமையில், தொமுச நடத்துநா் செயலா் ஜெகதீசன் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 17 போ் பங்கேற்றனா்.
வடலூரில் சிஐடியூ மண்டலத் தலைவா் ஏ.ஜான்விக்டா் தலைமையில், தொமுச அமைப்புச் செயலா் பால விநாயகம் முன்னிலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் 30 போ் பங்கேற்றனா்.
ஆா்ப்பாட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கக் கோரியும், 240 நாள்கள் பணி முடித்த அனைத்து தினக்கூலி ஓட்டுநா்கள், நடத்துநா்களை நிரந்தரம் செய்யக் கோரியும் முழக்கமிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.