

கடலூா் மாவட்டம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக உறுப்பினா் சி.வெ.கணேசனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவுகளில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவா்களில் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுக கடலூா் மேற்கு மாவட்டச் செயலருமான சி.வெ.கணேசனும் ஒருவராவாா்.
பொது முடக்கக் காலத்தில் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி வந்த இவருக்கு, ஏற்கெனவே தொற்று உறுதியானவா் மூலமாகவே பரவியிருப்பதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா். இதையடுத்து, சி.வெ.கணேசன் சென்னை போரூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.