

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது அனல்மின் நிலையத்தின் 6-ஆவது அலகில் கடந்த 7-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
நிரந்தரத் தொழிலாளர்கள் 2 பேர், ஒப்பந்தத்தில் தொழிலாளர்கள் 6 பேர் என மொத்தம் 8 பேர் தீக்காயம் அடைந்து, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இவர்களில் 4 பேர் சிகிச்சை பலனின்றி முன்னரே உயிரிழந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒப்பந்தத் தொழிலாளி அன்புராஜா (47) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.