சிதம்பரம் நகராட்சியின் குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் மறியல்

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு முன்பு சி.தண்டேஸ்வரநல்லூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் நகராட்சியின் குப்பை கிடங்கு முன்பு பொதுமக்கள் மறியல்
Updated on
1 min read

சிதம்பரம் அருகே ஓமக்குளம் பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கு முன்பு சி.தண்டேஸ்வரநல்லூர் பகுதி மக்கள் முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சி பகுதியில் உள்ள ஒட்டுமொத்த குப்பைகளையும், நகராட்சி நிர்வாகம் சி.தண்டேஸ்வரநல்லூர் ஊராட்சியின் உள்ள பகுதியான ஓமக்குளம் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளாக இப்பகுதி குப்பை கொட்டும் பகுதியாகவும், குடியிருப்புகள் பெருமளவில் இல்லாத பகுதியாகவும் இருந்துள்ளது. ஆனால், தற்போது குப்பை மேட்டைச் சுற்றி பெருமளவு குடியிருப்புகள் அமைந்துவிட்டதால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிப்பில் உள்ளனர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குப்பை கிடங்கு செல்லும் வழியில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

 மேலும், நகராட்சி ஊழியர்கள் பகலிலும், இரவிலும்  குப்பைகளை தீ மூட்டி விட்டு சென்று விடுவதாகவும். இதனால் தங்கள் பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும். மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும், தூசிகள் பறற்து குடியிருப்புகளில் பகுதிகளில் விழுவதாக தெரிவிக்கின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் பொருட்படுத்துவதில்லை என்றும், ஒப்பந்தத்தின் படி நகராட்சி நிர்வாகம் குப்பையை கொட்டுவதற்கு சி.தண்டேஸ்வர நல்லூர் ஊராட்சியிடம் செலுத்த வேண்டிய வரித்தொகையை இதுவரை பின்பற்றப்படவில்லை என கோரிக்கைகளை முன் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலிறிந்த சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் சி,முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com