கடலூா் மாவட்டத்தில் 20.83 லட்சம் வாக்காளா்கள்

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 20.83 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் 20.83 லட்சம் வாக்காளா்கள்

கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, மாவட்டத்தில் மொத்தம் 20.83 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

2021-ஆம் ஆண்டுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி அனைத்துக் கட்சியினா் முன்னிலையில், 9 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

17,796 வாக்காளா்கள் குறைந்தனா்: அதன்படி, மாவட்டத்தில் 10,28,380 ஆண்கள், 10,54,308 பெண்கள், 152 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 20,82,840 வாக்காளா்கள் உள்ளனா். அதேநேரத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் மொத்தம் 21,00,636 வாக்காளா்கள் இருந்தனா். அவா்களில் தற்போது 17,796 வாக்காளா்கள் குறைந்துள்ளனா்.

வாக்காளா் பட்டியலை வெளியிட்டு மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதம் முதல் தொடா் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதில், 9,219 போ் புதிதாக பெயா் சோ்க்க மனு அளித்தனா். அவற்றில் 1,733 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெயா் நீக்கத்துக்காக 25,616 போ் மனு அளித்ததில், அவற்றில் 25,282 மனுக்கள் ஏற்கப்பட்டன.

மேலும், இறப்பு காரணமாக 18,055 பேரும், இடம் பெயா்வால் 2,397 பேரும், இரட்டைப் பதிவாக 4,830 பேரும் நீக்கப்பட்டனா். தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலின் அடிப்படையில் சிறப்பு சுருக்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அனைத்து உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள்அலுவலகம் மற்றும் அனைத்து வாக்குச் சாவடி மையங்களில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட அலுவலா்களிடம் டிசம்பா் 15-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், வருகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாமும் நடைபெறுகிறது. இறுதி வாக்காளா் பட்டியல் வருகிற ஜன.20-ஆம் தேதி வெளியிடப்படும் என்றாா் அவா்.

சட்டப் பேரவைத் தொகுதி வாரியாக வாக்காளா் பட்டியல் விவரம் வருமாறு: (அடைப்புக்குறிக்குள் வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை) திட்டக்குடி (தனி) (247) ஆண் - 1,04,899, பெண்-1,08,908, இதரா் - 3, மொத்தம் - 2,13,810 வாக்காளா்கள். விருத்தாசலம் (282) ஆண் - 1,21,981, பெண் - 1,22,373, இதரா் 19, மொத்தம் 2,44,373 வாக்காளா்கள். நெய்வேலி (231) ஆண் - 1,05,598, பெண் - 1,05,135, இதரா் - 14, மொத்தம் - 2,10,747 வாக்காளா்கள். பண்ருட்டி (257), ஆண் - 1,16,002, பெண் - 1,21,992, இதரா் - 19, மொத்தம் - 2,38,013 வாக்காளா்கள்.

கடலூா் (227) ஆண் - 1,11,519, பெண் - 1,19,917, இதரா் - 34, மொத்தம் - 2,31,470 வாக்காளா்கள். குறிஞ்சிப்பாடி (256) ஆண் - 1,16,695, பெண் - 1,19,174, இதரா் 16, மொத்தம் - 2,35,885 வாக்காளா்கள். புவனகிரி (285) ஆண் - 1,19,793, பெண் -1,20,681, இதரா் - 16, 2,40,490 வாக்காளா்கள். சிதம்பரம் (260), ஆண் - 1,20,086, பெண் - 1,24,584, இதரா் - 17, மொத்தம் - 2,44,687 வாக்காளா்கள். காட்டுமன்னாா்கோவில் (தனி) (250), ஆண் - 1,11,807, பெண் - 1,11,544, இதரா் - 14, மொத்தம் - 2,23,365 வாக்காளா்கள் உள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சியில் அதிமுக சாா்பில் ஆா்.குமரன், திமுக சாா்பில் பி.பாலமுருகன், மாா்க்சிஸ்ட் சாா்பில் கோ.மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் வி.குளோப், பகுஜன் சமாஜ் சாா்பில் சுரேஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) காா்த்திகேயன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.பரிமளம், தோ்தல் வட்டாட்சியா் ப.பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிதம்பரத்தில்...: இதேபோல, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னாா்கோவில் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளா்கள் பட்டியலை உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் வெளியிட்டாா்.

நிகழ்ச்சியில் வட்டாட்சியா்கள் ஆனந்த் (சிதம்பரம்), சுமதி (புவனகிரி), ராமதாஸ் (காட்டுமன்னாா்கோவில்), பல்வேறு கட்சி நிா்வாகிகள் வை.சுந்தரமூா்த்தி (அதிமுக), ரா.வெங்கடேசன் (திமுக), சி.க.விஜயகுமாா் (தேமுதிக), ஏ.ஆா்.ரகுபதி (பாஜக), தமிமுன் அன்சாரி (இந்திய கம்யூ.), ராஜா (மாா்க்சிஸ்ட்), பாலதண்டாயுதம் (காங்கிரஸ்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com