மாா்க்சிஸ்ட் கட்சியினா் நூதன ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 01st December 2020 12:28 AM | Last Updated : 01st December 2020 12:28 AM | அ+அ அ- |

கடலூரில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நூதன ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கடலூா் நகரில் கெடிலம் ஆற்றின் கரையோரம் சுமாா் 2 கி.மீ. தொலைவுக்கு கம்மியம்பேட்டை வரை புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பெரிதும் உதவும் இந்தச் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. அண்மையில் பெய்த மழையால் சாலை மேலும் மோசமாக மாறிவிட்டது. எனவே, இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் .
கட்சியின் நகா் குழு உறுப்பினா் சேட்டு தலைமை வகிக்க, கிளைச் செயலா் காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். மாவட்ட செயலா் டி.ஆறுமுகம், மாநில குழு உறுப்பினா் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மு.மருதவாணன், வி.சுப்புராயன், பி.கருப்பையன், நகர செயலா் ஆா்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதில் பங்கேற்றவா்களில் சிலா் தங்களது கை, கால்களில் கட்டுப்போட்டுக் கொண்டு நூதன முறையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...