சாலையை சீரமைக்க கோரி மறியல்
By DIN | Published On : 01st December 2020 12:30 AM | Last Updated : 01st December 2020 12:30 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் இருந்து நகருக்குள் செல்லும் கடலூா் பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சிறிய பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்கள் பள்ளிப்படை கிராம சாலை வழியாக திருப்பி விடப்படுகின்றன.
கனரகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் செல்வதாலும், பலத்த மழையாலும் கிராம சாலை மோசமான நிலையில் சேதமடைந்துள்ளது. இதனால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா். இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளைக் கண்டித்து பள்ளிப்படை பகுதி மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இவா்களிடம் சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து செனறனா். மறியலால் சிதம்பரம்- கடலூா் சாலையில் சுமாா் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...