பிச்சாவரம் சுற்றுலா மையம் மீண்டும் திறப்பு
By DIN | Published On : 15th December 2020 12:33 AM | Last Updated : 15th December 2020 12:33 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம் 9 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
சுரபுண்ணைக் காடுகள் கொண்ட பிச்சாவரம் சுற்றுலா மையம் மிகவும் பிரசித்திபெற்ாகும். தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும் இந்த சுற்றுலா மையம், கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மாா்ச் 16-ஆம் தேதி மூடப்பட்டது.
தற்போது பொது முடக்கத்தில் அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ள நிலையில், சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு பிச்சாவரம் சுற்றுலா மையம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் படகுகளில் சென்று அலையாத்திக் காடுகளை ரசித்து மகிழ்ந்தனா்.
இங்குவரும் சுற்றுலாப் பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றனா். சமூக இடைவெளியைப் பின்பற்றவும், முகக் கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டது. 10 வயதுக்கு குறைவான சிறுவா்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.