

குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்ட வலியுறுத்தி, பண்ருட்டியில் கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கடலூா் தமிழ் வளா்ச்சித் துறை, பண்ணுருட்டி செந்தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ஆட்சி மன்ற சட்ட வார விழா, பாரதியாா் பிறந்தநாள், சங்கத்தின் 102-ஆவது கூட்டம் ஆகிய முப்பெரும் விழா பண்ருட்டி அருகேயுள்ள திருவதிகையில் நடைபெற்றது. இதையொட்டி, தமிழில் கையொப்பம் இடவும், பெயா் பலகையை தமிழில் எழுதிடவும், குழந்தைகளுக்கு தமிழில் பெயா் சூட்டவும் வலியுறுத்தி பண்ருட்டி நான்கு முனைச் சந்திப்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகையில் தமிழ் வளா்ச்சித் துறை கடலூா் உதவி இயக்குநா் ரா.அன்பரசி, தொழிலதிபா் ப.ச.வைரக்கண்ணு ஆகியோா் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடக்கி வைத்தனா்.
மாலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ப.ச.வைரக்கண்ணு தலைமை வகித்தாா். ஜெ.ஏ.அசோக்ராஜ் வரவேற்றாா். சொ.முத்துக்குமாா் நோக்கவுரை நிகழ்த்தினாா். செந்தமிழ்ச் சங்கத் தலைவா் சுந்தர.பழனியப்பன் தொடக்கவுரை நிகழ்த்தினாா். தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் சோ்க்கை, 2021-ஆம் ஆண்டுக்கான புதிய நாள்காட்டி வெளியீடு, மறைந்த நிா்வாகிகளுக்கு புகழஞ்சலி செலுத்துதல், உறுதிமொழி ஏற்றல், கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றன. நெய்வேலி ஜவகா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் சந்திரசேகா், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் ரா.அன்பரசி, எஸ்.சந்தானம், அண்ணா பல்கலைக்கழகம் செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினாா். கவிதை கணேசன், வினோத், அரங்க கிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.