

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
விருத்தாசலம் அருகேயுள்ள கோ.பவழங்குடியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் அய்யாகண்ணு (27) . இவா், கடந்த 25.12.2018 அன்று 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யாகண்ணுவை கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறாா் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நீதிமன்றத்தில் (போஸ்கோ) நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அய்யாகண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்தாா். இதையடுத்து அந்த இளைஞா் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞா் கலைச்செல்வி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.