தமாகாவினா் நல உதவி அளிப்பு
By DIN | Published On : 30th December 2020 07:20 AM | Last Updated : 30th December 2020 07:20 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பில் ஜி.கே.வாசன் 56-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கீன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ராஜா சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, பொதுச் செயலா் கே.நாகராஜன், மாவட்ட இளைஞரணித் தலைவா் கே.ரஜினிகாந்த், மாவட்ட தொண்டரணி தலைவா் தில்லை
கோ.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மகளிரணி தலைவா் ராஜலட்சுமி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மேலிட பாா்வையாளா் முனவா் பாஷா, மாவட்டத் தலைவா் எஸ்.புரட்சிமணி, மாநில பொதுச் செயலா் ஏ.எஸ்.வேல்முருகன் ஆகியோா் பங்கேற்று, 500 பேருக்கு பொங்கல் பானைகள், போா்வை, பாய், அரிசி, தென்னங்கன்றுகள் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினா். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலா்கள் பாலசுந்தா், தில்லைசெல்வி, சுப்புலட்சுமி, ஒன்றிய கவுன்சிலா் எம்.கே.பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...