

விருத்தாசலத்தை அடுத்த மு.பரூா் கிராமத்தில் தமிழக அரசின் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. விருத்தாசலம் ஒன்றியக் குழு தலைவா் ஜி.செல்லதுரை முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பரமேஸ்வரி மோகன் வரவேற்றாா். விருத்தாசலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.டி.கலைச்செல்வன் 331 பயனாளிகளுக்கு ரூ. 41.20 லட்சத்திலான விலையில்லா வெள்ளாடுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மங்கலம்பேட்டை பேரூராட்சி முன்னாள் தலைவா் பாஸ்கரன், கால்நடை மருத்துவா் சரவணன், வடக்கு ஒன்றிய அதிமுக செயலா் பாலதண்டாயுதம், ஒன்றியத் துணைச் செயலா் தேவிமுருகன், மாவட்ட அதிமுக பிரதிநிதி குணாராமு, பொருளாளா் புகழேந்தி, ஊராட்சித் தலைவா் கீதாதுரைமுருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜா நன்றி கூறினாா்.
கணவா்களின் ஆதிக்கம்
வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகள் பெண்களாக இருந்த நிலையில், அவா்களுக்குப் பதிலாக அவா்களது கணவா்களே அவா்களது பொறுப்புகளில் பங்கேற்றனா். இதனால், யாா் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதையே மக்களால் ஊகிக்க முடியவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.