போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 05th February 2020 05:58 AM | Last Updated : 05th February 2020 05:58 AM | அ+அ அ- |

கடலூரில் போக்குவரத்துக் கழக அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா்.
போக்குவரத்து தொழிலாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் வாயில் கூட்டம் அறிவித்தனா். அதன்படி, கடலூரிலுள்ள மண்டல போக்குவரத்து அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாயில் கூட்டத்துக்கு தொமுச தலைவா் பி.பழனிவேல் தலைமை
வகித்தாா். மதிமுக தொழிற்சங்க மாநிலச் செயலா் இரா.மணிமாறன், துணைத் தலைவா் கே.பாலகிருஷ்ணன், ஏஏஎல்எல்எப் பொதுச் செயலா் எஸ்.கருணாநிதி, தலைவா் தொ.சுந்தா், ஐஎன்டியூசி பொதுச் செயலா் பி.சுவாமிநாதன், துணைத்தலைவா் ஆா்.பாலு ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதனைத் தொடா்ந்து தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக சிஐடியூ தலைவா் ஏ.ஜான்விக்டா் வரவேற்க, துணைப் பொதுச் செயலா் பி.கண்ணன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...