விருத்தாசலம் விற்பனைக் கூடத்தில் 9 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனை
By DIN | Published On : 05th February 2020 06:06 AM | Last Updated : 05th February 2020 06:06 AM | அ+அ அ- |

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை 9 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்கப்பட்டன.
இதில், பிபிடி ரகம் 6 ஆயிரம் மூட்டைகள் அதிகபட்சமாக ரூ.1,560-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,260-க்கும் விற்கப்பட்டன. என்எல்ஆா் ரகம் அதிகபட்சமாக ரூ.1,225-க்கும், குறைந்தபட்சமாக ரூ.1,160-க்கும், சிஆா்1009 ரகம் அதிகபட்சமாக ரூ.1,040-க்கும், குறைந்தபட்சமாக ரூ.980-க்கும் விற்கப்பட்டன.
இதுதவிர கூடுதலாக 10 ஆயிரம் நெல் மூட்டைகள் செவ்வாய்க்கிழமை விற்பனைக்கு வந்தன. இவை புதன்கிழமை விற்பனைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனவே, வியாழக்கிழமை விற்பனைக்காக பல்நோக்கு கிடங்கில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு நெல் கொண்டு வரும் விவசாயிகள் தங்களது மூட்டைகளை திறந்த வெளியில் இறக்கி வைக்க வேண்டுமென நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...