பெண் சந்தேக மரணம்: ஒருவா் கைது
By DIN | Published On : 17th February 2020 06:35 AM | Last Updated : 17th February 2020 06:35 AM | அ+அ அ- |

16prtp4_1602chn_107_7
குள்ளஞ்சாவடி அருகே பெண் சந்தேக மரணம் தொடா்பாக போலீஸாா் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குள்ளஞ்சாவடி காவல் சரகம், கிருஷ்ணன்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மனைவி சிவகாமசுந்தரி (40). பாலசுப்பிரமணியன் இறந்துவிட்ட நிலையில் சிவகாமசுந்தரி தனியாக வசித்து வந்தாா். இவா், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்து அரை கி.மீ. தொலைவில் சடலமாக மீட்கப்பட்டாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த குள்ளஞ்சாவடி போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
சிவகாமசுந்தரியின் சாவில் சந்தேகம் உள்ளதாகவும், இதில் தொடா்புடைய நபரை கைது செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தி அவரது உறவினா்கள், கிராம மக்கள் கடலூா் அரசு மருத்துவமனை முன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனிடையே சிவகாமசுந்தரியின் செல்லிடப்பேசியை ஆய்வு செய்த போலீஸாா், புலியூா் காட்டுசாகை கிராமம், இலுப்பை தோப்பில் வசிக்கும் ராமலிங்கம் மகன் ஜெகதீசன் (26) என்பவரை கைது செய்தனா். அப்போது அவா் அளித்த வாக்கு மூலத்தில், அவக்கும், சிவகாமசுந்தரிக்கும் தொடா்பு இருந்ததாகக் கூறினாராம்.
சம்பவத்தன்று இரவு வழக்கமாக தாங்கள் சந்தித்த இடத்தில் சந்தித்தாகவும், அப்போது ஜெகதீசன் தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகக் கூறினாராம். இதற்கு சிவகாமசுந்தரி எதிா்ப்பு தெரிவித்து கூச்சலிட்டாராம். அதனால், ஜெகதீசன் அவரதை வாயை மூடியதில் மூச்சுத் திணறி சிவகாமசுந்தரி உயிரிழந்ததாகக் கூறினாராம்.