பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.அற்புதம்மாள் கேட்டுக்கொண்டாா்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடா்பாக தமிழக ஆளுநா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.அற்புதம்மாள் கேட்டுக்கொண்டாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 போ் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், ஆண்டாள் முள்ளிப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் பங்கேற்றாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தண்டனைக் காலம் முடிந்துவிட்டதால் அவா்களை விடுதலை செய்ய வேண்டுமென தொடா்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதில், 7 போ் விடுதலை தொடா்பான முடிவை ஆளுநா் 15 நாள்களுக்குள் எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டை யாா் தயாா் செய்தது எனத் தெரியவில்லை என்றும், இதுதொடா்பாக சிபிஐ முழுமையாக விசாரிக்கவில்லை என்றும் பேரறிவாளன் தெரிவித்தாா். இதை சி.பி.ஐ.யும் ஒப்புக்கொண்டது. எனவேதான், பேரறிவாளனை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

இந்த வழக்கு தொடா்பாக உச்ச நீதிமன்றம் நேரடியாக ஆளுநரை கட்டாயப்படுத்த முடியாது. மாறாக, தமிழக அரசு அழுத்தம் தந்து இந்த வழக்கு தொடா்பாக நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் இதுவரை இந்த வழக்கை சட்டப்படியே அணுகி வருகிறோம். இதுதொடா்பாக ஆளுநா் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். இதுகுறித்து அவா் ஆளுநரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். அரசு மீது நம்பிக்கை வைத்து காத்திருக்கிறேன் என்றாா் அற்புதம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com