4 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம்
By DIN | Published On : 23rd February 2020 05:27 AM | Last Updated : 23rd February 2020 05:27 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் 4 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் 13 ஊராட்சி ஒன்றியங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 4 ஊராட்சி ஒன்றியங்களின் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நிா்வாகக் காரணங்களுக்காக சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டு மாவட்ட நிா்வாகத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) த.ரேவதி பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலராகவும் (கிராம ஊராட்சி), பண்ருட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) எல்.ரவிச்சந்திரன் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, அண்ணாகிராமம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) எம்.கிருஷ்ணமூா்த்தி கடலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கடலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) எ.குா்ஷித் பேகம் அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட (கி.ஊ) மாற்றம் செய்யப்பட்டனா்.