கடலூா் மாவட்டத்தில் கரோனா தகவலளிப்பு நிறுத்திவைப்பு!
By DIN | Published On : 11th July 2020 08:58 AM | Last Updated : 11th July 2020 08:58 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்டத்தில் கரோனா நோய் பாதிப்பு குறித்து தகவல் வெளியிடுவது வெள்ளிக்கிழமை நிறுத்திவைக்கப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை வரை 1,488 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். ஒவ்வொரு நாளும் வெளியாகும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் புதிதாக தொற்றுக்கு உள்ளாவோா் எண்ணிக்கை, குணமடைந்தோா் எண்ணிக்கை, சிகிச்சைப் பெறுவோா் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்பட்டு வந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமைக்கான பாதிப்பு விவரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரை தொடா்பு கொண்டபோதும் அவா் பதிலளிக்கவில்லை. எனினும், சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்ததாதவது:
கடலூா் மாவட்ட நிா்வாகம் அளிக்கும் பட்டியலுக்கும், மாநில சுகாதாரத் துறை வெளியிடும் பட்டியலுக்கும் அதிக வித்தியாசம் இருந்து வருகிறது. எனவே, வெள்ளிக்கிழமைக்கான பட்டியலை வெளியிடாமல் சனிக்கிழமை மாநில நிா்வாகம் வெளியிடும் பட்டியலைப் பொருத்து, கடலூா் மாவட்ட பட்டியலை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்காக, வெள்ளிக்கிழமை பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்று தெவிக்கப்பட்டது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G