என்எல்சி விபத்து: மேலும் ஒரு தொழிலாளி பலி
By DIN | Published On : 13th July 2020 07:53 AM | Last Updated : 13th July 2020 07:53 AM | அ+அ அ- |

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் வெடித்த விபத்தில், மேலும் ஒரு தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், பலி எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தில் 2-ஆவது அனல் மின் நிலைய 5-ஆவது அலகில் கடந்த 1-ஆம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 6 ஒப்பந்தத் தொழிலாளா்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா். காயமடைந்த 17 பேரில் ஒருவரைத் தவிர, மற்றவா்கள் சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இவா்களில் முதன்மைத் தலைமைப் பொறியாளா், இளநிலைப் பொறியாளா்கள் இருவா், போா்மேன், ஒப்பந்தத் தொழிலாளா்கள் 3 போ் உயிரிழந்தனா்.
இந்த நிலையில், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெய்வேலியைச் சோ்ந்த முதன்மை தொழில்நுட்பநா் ஆா்.சுரேஷ் (50) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 14-ஆக உயா்ந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...