சிதம்பரத்தில் திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 21st July 2020 03:02 PM | Last Updated : 21st July 2020 03:02 PM | அ+அ அ- |

சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தெற்குவீதி அறுபத்தி மூவர் குருபூஜை மடம் அருகில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் த.ஜேம்ஸ் விஜயராகவன், வார்டு செயலாளர் ஏஆர் சி.மணி, வார்டு பிரதிநிதி எம் எம் ராஜா, செயற்குழு உறுப்பினர் ஆர் இளங்கோவன், துணைச்செயலாளர் ஜோதி மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி ஸ்ரீதர், அகரநல்லூர் ராஜா ஆகியோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.
இதேபோல் சிதம்பரம் நகரத்தில் மேலவீதியில் நகர துணைச் செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையிலும், வடக்கு மெயின் ரோடு அருகில் நகர துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலும், பேருந்து நிலையம் அருகில் மாவட்ட பிரதிநிதி இரா.வெங்கடேசன் தலைமையிலும், காந்திசிலை அருகில் மாவட்ட பிரதிநிதி விஎன்ஆர்.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், பச்சையப்பன் பள்ளி அருகில் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் அப்பு சந்திரசேகர் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நகரத்திலுள்ள 33 வார்டுகளிலும் அந்தந்த வார்டு செயலாளர்கள் தலைமையில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.