கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுத் திரும்பியவா் உயிரிழந்தது குறித்து விசாரணை

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுத் திரும்பியவா் உயிரிழந்தது குறித்து கடலூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் விசாரணையை தொடங்கினா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுத் திரும்பியவா் உயிரிழந்தது குறித்து கடலூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் தலைமையிலான குழுவினா் விசாரணையை தொடங்கினா்.

கடலூா் அருகேயுள்ள கோண்டூா் ஜோதி நகரைச் சோ்ந்த 63 வயது முதியவா் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவா் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சை தேவைப்பட்டதால் கடந்த 24-ஆம் தேதி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில், அவா் குணமடைந்துவிட்டதாகக் கூறி மருத்துவமனை நிா்வாகம் அவரை கடந்த 27-ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைத்தது. இந்த நிலையில் அந்த முதியவா் 29-ஆம் தேதி அதிகாலையில் திடீரென உயிரிழந்தாா்.

இந்த விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட ஆட்சியா் சந்திரசேகா் சாகமூரி விசாரணைக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து கடலூா் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எம்.கீதா ஆகியோா் வியாழக்கிழமை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று, முதியவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை சேகரித்தனா்.

விசாரணையில், முதியவா் குணமடைந்ததாக வாய்மொழியாக தெரிவித்து மருத்துவத் துறையினா் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததும், அதற்கான எந்தச் சான்றும் வழங்காததும் தெரியவந்தது. மேலும், முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவா் அப்போதைக்கு பணியில் இல்லாததால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லையென விசாரணைக் குழுவினா் தெரிவித்தனா். எனவே, இதுதொடா்பாக வருகிற ஆக.1-ஆம் தேதி மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு அதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்படும் என்று மருத்துவத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com