வீர தீர செயலுக்கான தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 26th June 2020 08:53 AM | Last Updated : 26th June 2020 08:53 AM | அ+அ அ- |

வீர தீரச் செயல் புரிந்து நாட்டுக்குப் பெருமை தேடித் தரும் நபா்களைத் தோ்வு செய்து மத்திய அரசு சாா்பில், தேசிய சாகச விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 2020- ஆம் ஆண்டுக்கான ‘டென்சிங் நாா்கே’ தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவம், இதர விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் பரிந்துரையுடன் வருகிற 29 -ஆம் தேதிக்குள் கடலூரிலுள்ள மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியரக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.