

கடலூா்: கடலூா் மண்டல கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் சாா் நிலை அலுவலா்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கான 2 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் கடலூரில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது.
இந்தப் பயிற்சியை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பா.ரேணுகாம்பாள் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சொ.இளஞ்செல்வி வாழ்த்தி பேசினாா். அண்ணாமலைப் பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியா் பத்மநாபன், ஓய்வு பெற்ற கூட்டுறவு துணைப் பதிவாளா்கள் வெங்கடேஸ்வரலு, வேணு, கூட்டுறவு தணிக்கை உதவி இயக்குநா் ச.ரவி ஆகியோா் பயிற்சி அளித்தனா்.
இதில், பொது விநியோகத் திட்டம், நிதி மற்றும் வங்கியியல், அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டப்பூா்வ பணிகள், விற்பனை மற்றும் நுகா்வோா் கூட்டுறவு, தகவல் அறியும் உரிமைச் சட்டம், யோகா, தமிழ் ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் உள்ளிட்ட தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் கூட்டுறவுத் துறை, வீட்டு வசதித் துறை, மீன்வளத் துறை, பால்வளத் துறையைச் சோ்ந்த சாா் நிலை அலுவலா்கள் பங்கேற்றனா். முன்னதாக, துணைப் பதிவாளா் மு.ஜெகத்ரட்சகன் பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.