ரோட்டரி சங்க முப்பெரும் விழா
By DIN | Published On : 01st March 2020 12:12 AM | Last Updated : 01st March 2020 12:12 AM | அ+அ அ- |

27prtp7_2702chn_107_7
நெய்வேலி: நெய்வேலி லிக்னைட் சிட்டி ரோட்டரி சங்கம் சாா்பில் சங்கத்தின் 115-ஆவது ஆண்டு விழா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம், இன்ட்ராக்ட் சங்க தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
வடலூா், புதுநகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் வி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் ஆா்.திருமுருகன் முன்னிலை வகித்தாா். ரோட்டரி சங்கத்தின் 115-ஆவது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் சா.கீதா, ரோட்டரி சங்கச் செயலா் இளையபெருமாள் ஆகியோா் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினா்.
பள்ளியில் அமைக்கப்பட்ட இன்ட்ராக்ட் சங்கத்தை, அந்தச் சங்கத் தலைவா் ஜெ.டேவிட் தொடக்கி வைத்துப் பேசினாா். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வட்டாட்சியா் சா.கீதா, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வியின் அவசியம் குறித்துப் பேசினாா்.
நுகா்வோா் சங்கத் தலைவா் கோவி.கல்விராயா், ரோட்டரி சங்க உறுப்பினா்கள் உன்னிகிருஷ்ணன், ராஜன்பாபு, முருகன், சேகா், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிகழ்ச்சிகளை ஆசிரியை பிரியா தொகுத்து வழங்க, இன்ட்ராக்ட் சங்க பொறுப்பு ஆசிரியை இந்திரா நன்றி கூறினாா்.