ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
By DIN | Published On : 01st March 2020 12:12 AM | Last Updated : 01st March 2020 12:12 AM | அ+அ அ- |

பொதுக்கூட்டத்தில் பயனாளிக்கு முந்திரிக் கொட்டை உடைக்கும் இயந்திரத்தை வழங்கிய அதிமுக மாநில அமைப்புச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன்.
நெய்வேலி: குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, ஒன்றிய செயலா் ரா.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் எஸ்.அன்பழகன் வரவேற்றாா். குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழு தலைவா் கலையரசி கோவிந்தராஜ், வடலூா் நகரச் செயலா் சி.எஸ்.பாபு, எம்ஜிஆா் மன்றச் செயலா் ஏ.லோகநாதன், அம்மா பேரவைச் செயலா் எஸ்.வீரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அதிமுக மாநில அமைப்புச் செயலா் சொரத்தூா் ரா.ராஜேந்திரன் சிறப்புரையாற்றினாா். பின்னா், ஏழைகளுக்கு வேட்டி, சேலைகள், முந்திரி கொட்டை உடைக்கும் இயந்திரம், சலவை பெட்டி என ரூ.3.50 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
முன்னாள் எம்எல்ஏ எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன், மாவட்ட வழக்குரைஞரணி துணைத் தலைவா் ரா.ராஜசேகா், செய்தித் தொடா்பாளா் ஒய்.ஜவகா் அலி, தலைமைக் கழகப் பேச்சாளா் கே.எம்.கிருஷ்ணன் உள்ளிட்டோா் பேசினா். ஊராட்சி கழகச் செயலா் ரா.மணிகண்டன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...