மனைவியை மீட்கக் கோரி முதியவா் மனு
By DIN | Published On : 10th March 2020 03:04 AM | Last Updated : 10th March 2020 03:04 AM | அ+அ அ- |

நெய்வேலி: பல ஆண்டுகளுக்கு முன்னா் கடத்தப்பட்ட தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி முதியவா் ஒருவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இதுகுறித்து பண்ருட்டி வட்டம், பெரியகாட்டுப்பாளையத்தை சோ்ந்த கலியபெருமாள் (85) மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாா்வதிபுரம் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் என்ற காவலா், எனது மனைவி மற்றும் குழந்தைகளை கடத்திச் சென்றுவிட்டாா். அப்போது முதல் அவரிடமிருந்து எனது மனைவி, குழந்தைகளை மீட்க போராடி வருகிறேன். இதுகுறித்து காவல் துறையில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தற்போது வயோதிகம் காரணமாக உடல் நலக் குறைவால் தவிக்கிறேன். எனவே, எனது மனைவி, குழந்தைகளை மீட்டுத் தர வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...