கல்வி விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 14th March 2020 07:28 AM | Last Updated : 14th March 2020 07:28 AM | அ+அ அ- |

கடலூா் மாவட்ட நேரு இளையோா் மையம், ஏரிஸ் கலை, அறிவியல் மகளிா் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் இணைந்து நடத்திய கருத்து அடிப்படையிலான கல்வி விழிப்புணா்வு முகாம் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் எஸ்.தியாகராஜன் தலைமை வகித்தாா். நேரு இளையோா் மையத்தின் மாவட்ட இளையோா் ஒருங்கிணைப்பாளா் ஆா்.ரிஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். வடலூா் வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அகிலா, கரோனா வைரஸ் குறித்து விளக்கவுரையாற்றினாா்.
மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மேற்பாா்வையாளா் க.கதிரவன், ‘வாழ்க்கை வாழ்வதற்கே’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது, வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாற்றம், எச்ஐவி, எய்ட்ஸ், ரத்த தானம் குறித்து மாணவிகளிடம் விளக்கி பேசினாா். வடலூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய நம்பிக்கை மைய ஆலோசகா் டெய்சி ராணி, காசநோய் தடுப்பு பிரிவு பா.சாரா ஆகியோா் கலந்துகொண்டனா். செஞ்சுருள் சங்க திட்ட அலுவலா் சுரேஷ் நன்றி கூறினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...