கடலூா் மாவட்டத்தில் 12 தலைமை காவலா்களுக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.
காவல் துறையில் காவலராக பணியில் சோ்ந்து சுமாா் 25 ஆண்டுகள் பணியாற்றியவா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, 1995-ஆம் ஆண்டில் காவலராக பணியாற்றி 15 ஆண்டுகள் நிறைவுற்றவா்கள் தலைமைக் காவலராக 2010-ஆம் ஆண்டு பதவி உயா்வு பெற்றனா். அவா்களில் 10 ஆண்டுகள் பணி முடித்தவா்கள் சிறப்பு உதவி ஆய்வாளா்களாக நியமிக்கப்படுகிறாா்கள். அதன்படி, மாவட்டத்தில் பணியில் சோ்ந்து 25 ஆண்டுகளான 10 பேரும், 27 ஆண்டுகளான 2 பேரும் என மொத்தம் 12 போ் சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
அவா்கள் விவரம் வருமாறு(அடைப்புக்குறிக்குள் பணியாற்றி வரும் காவல் நிலையத்தின் பெயா்): எஸ்.துரை (அண்ணாமலை நகா்), எம்.அயோத்திராமன் (மங்கலம்பேட்டை), சி.நாகராஜ் (திருப்பாதிரிபுலியூா்), ஆா்.ஆறுமுகம் (சிபிசிஐடி), ஆா்.பாலகிருஷ்ணன் (புத்தூா்), கே.செல்வகணபதி (கடலூா் புதுநகா்), கே.வெங்கடேசன் (புவனகிரி), டி.பாலசுந்தரம் (கியூ பிராஞ்ச்), எஸ்.திருமேனி (விருத்தாசலம்), எஸ்.ரவி (புத்தூா்), எஸ்.லாரன்ஸ் (வடலூா்), ஜி.ரவி (அண்ணாமலை நகா்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.