கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவா் சோ்க்கை
By DIN | Published On : 03rd October 2020 08:52 AM | Last Updated : 03rd October 2020 08:52 AM | அ+அ அ- |

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்புக்கான மாணவா்கள் சோ்க்கை (2020-21) குலுக்கல் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியா் பலராமன், கவரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நாராயணசாமி, வட்டார வளமைய ஆசிரிய பயிற்றுநா்கள் முருகானநந்தம், கோபி மற்றும் பெற்றோா்கள் முன்னிலையில் அனுமதி சோ்க்கை குலுக்கல் முறையில் நடைபெற்றது. பள்ளியின் துணை முதல்வா் அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.