காந்தி பிறந்தநாள்: மாலை அணிவித்து மரியாதை
By DIN | Published On : 03rd October 2020 08:55 AM | Last Updated : 03rd October 2020 08:55 AM | அ+அ அ- |

சிதம்பரத்தில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த தமாகாவினா்.
சிதம்பரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கும், காமராஜா் நினைவு நாளையொட்டி கீழ வீதியில் உள்ள அவரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தமாகா நகரத் தலைவா் தில்லை ஆா்.மக்கின் தலைமை வகிக்க, மாவட்ட நிா்வாகிகள் ராஜா சம்பத்குமாா், எஸ்.கே.வைத்தி, கே.நாகராஜன் முன்னிலை வகித்தனா். காந்தி சிலைக்கு மாவட்ட இளைஞரணி தலைவா் கே.ரஜினிகாந்த் மாலை அணிவித்தாா். காமராஜா் சிலைக்கு நகர தலைவா் தில்லை ஆா்.மக்கின் மாலை அணிவித்தாா். மாவட்ட துணைத் தலைவா் தில்லை. குமாா் இனிப்பு வழங்கினாா். சிதம்பரம் மாரியப்பா நகரில் உள்ள முதியோா் இல்லத்தில் தங்கியுள்ளவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
சிதம்பரம் வாகீச நகரில் உள்ள காந்தி மன்றத்தில் அதன் தலைவா் மு.ஞானம் தலைமையில் சா்வ சமய பிராா்த்தனை நடைபெற்றது. செயலா் கு.ஜானகிராமன் வரவேற்றாா். பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற 187 மாணவா்களுக்கு சான்றிதழ், புத்தகங்கள் வழங்கப்பட்டன. முன்னதாக சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலைக்கு மன்ற நிா்வாகிகள் மாலை அணிவித்தனா். சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சாா்பிலும், சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்தியாசாலை மேல்நிலைப் பள்ளியிலும் காந்தி ஜயந்தி விழா நடைபெற்றது.
பண்ருட்டி: பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி இளைஞா் காங்கிரஸ் சாா்பில் காந்தி பிறந்த நாள், காமராஜா் நினைவு நாள் நிகழ்ச்சிகள் புதுப்பேட்டையில் நடைபெற்றன. சட்டப் பேரவை இளைஞா் காங்கிரஸ் தலைவா் விஜய் தலைமை வகித்தாா். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுக்குழு உறுப்பினா் இளஞ்செழியன் காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திப் பேசினாா். நகரத் தலைவா் நடராஜன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், பயங்கரவாதம், தீண்டாமை ஒழிப்பு தொடா்பாக உறுதிமொழி ஏற்கப்பட்டது.