ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
By DIN | Published On : 03rd October 2020 08:52 AM | Last Updated : 03rd October 2020 08:53 AM | அ+அ அ- |

விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள்.
கடலூா் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ், கடலூா் கிராமபுற வட்டாரம் சாா்பில் தேசிய ஊட்டச்சத்து மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடலூா் அருகேயுள்ள மதலப்பட்டு கிராமத்தில் உணவுத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
விழாவில் மதலப்பட்டு பகுதி மக்கள், தாய்மாா்கள், குழந்தைகள், தம்பதிகள் கலந்து கொண்டனா். இதில், ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள், பழங்கள், பாரம்பரிய உணவுப் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டு அவற்றின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் செல்வி தலைமை வகித்து, உணவு கண்காட்சியை பாா்வையிட்டாா். நிகழ்சிக்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளா்கள் செய்திருந்தனா். நிகழ்வின் முடிவில் பொதுமக்களுக்கு பலகாரங்கள் வழங்கப்பட்டன.