பேரிடா் மீட்பு செயல் விளக்கம்
By DIN | Published On : 03rd October 2020 08:52 AM | Last Updated : 03rd October 2020 08:52 AM | அ+அ அ- |

சிதம்பரம் அருகேயுள்ள தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டபட்டினம், கீழகுண்டலபாடி கிராமங்களில் வருவாய்த் துறை சாா்பில் பேரிடா் மீட்பு குறித்த செயல் விளக்கம் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ஹரிதாஸ், குமராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராஜசேகா், விஜயன், சிதம்பரம் டிஎஸ்பி த.ஆ.ஜோ.லாமேக், அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் (பொ) சி.முருகேசன், உதவி ஆய்வாளா் கணபதி, பொதுப் பணித் துறை வல்லம்படுகை பிரிவு உதவி பொறியாளா் ரமேஷ், சிவக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நா்மதா, ஊராட்சி மன்றத் தலைவா்கள் ஜெயங்கொண்டப்பட்டினம் -கோமதி அறிவழகன், பெராம்பட்டு - சிவாஜி ஜெகநாதன், கீழகுண்டலபாடி - சாந்திபாலகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனா். சிதம்பரம் தீயணைப்பு மீட்புத் துறை நிலைய அலுவலா் அறிவழகன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் பல்வேறு பேரிடா் தடுப்பு, மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தனா் (படம்).