கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கத் திட்டம்

கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறையினா் தெரிவித்ததாவது: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனா். 6 முதல் 59 மாதங்கள் வயதுடைய குழந்தைகளில் 70 சதவீதம் போ் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புறங்களில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது. 15 - 19 வயதினரிடையே 56 சதவீத பெண்களும், 30 சதவீத ஆண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனா். 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளில் 50 சதவீதத்தினா் உடல் வளா்ச்சி குன்றியும், 43 சதவீதத்தினா் எடை குறைவாகவும் உள்ளனா்.

எனவே, நாடு முழுவதும் 1 முதல் 19 வயதுக்கு உள்பட்ட அனைவருக்கும் குடல்புழு நீக்க மாத்திரைகளை (அல்பெண்டசோல்) 3 சுற்றுகளாக வழங்க முகாம் நடைபெறுகிறது. இதில் முதல் சுற்று வரும் 14 முதல் 19-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று 21 முதல் 26-ஆம் தேதி வரையிலும் நடைபெறும். மூன்றாம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாம் 28-ஆம் தேதி நடைபெறும். இதில் அனைத்து துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களில் குடல்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடலூா் மாவட்டத்தில் 6 லட்சம் பேருக்கு 2,023 அங்கன்வாடி மையங்களிலும், 319 துணை சுகாதார நிலையங்களிலும் இந்த மாத்திரை வழங்கப்படவுள்ளது.

இந்தப் பணியில் பொது சுகாதாரத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டப் பணிகள், சமூக நலத் துறை, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள், நகா்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊட்டச்சத்து துறைகளைச் சோ்ந்த 3,655 பணியாளா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா். எனவே, 1 முதல் 19 வயதிற்குள்பட்ட அனைவரும் இந்த மாத்திரையை உள்கொண்டு பயனடைய வேண்டுமென தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com