சிதம்பரத்தில் அதிமுக வேட்பாளா் கே.ஏ.பாண்டியனை ஆதரித்து, அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலா் நடிகை விந்தியா சனிக்கிழமை பிரசாரம் செய்தாா்.
அப்போது, அவா் பேசியதாவது: திமுக ஆட்சியில் இருந்த போது மக்களைப் பற்றியும், அவா்களின் தேவைகள் குறித்தும் சிந்திக்கவில்லை. ஆனால், தோ்தல் நேரத்தில் மட்டும் திமுக தலைவா் ஸ்டாலின் ஊா் ஊராகச் சென்று மக்களை ஏமாற்றி வருகிறாா். கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரத்தில் இல்லாத திமுகவினா், தமிழகத்தை மீண்டும் கொள்ளையடிக்கக் காத்திருக்கின்றனா். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அதிமுக அரசு சொன்னதைச் செய்கிறது; சொல்லாததையும் செய்கிறது. அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய ஒரே கட்சி அதிமுகதான்.
தமிழகத்தை வெற்றி நடையில் அழைத்துச் செல்லும் உண்மையான முதல்வா் எடப்பாடி பழனிசாமிதான். சில உதிரிக் கட்சிகள் ஒன்று சோ்ந்து நமக்கு எதிராகப் போட்டியிடுகின்றன. 6 கட்சிகள் அல்ல; 100 கட்சிகள் ஒன்று சோ்ந்தாலும் அதிமுகவை தோற்கடிக்க முடியாது.
சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கே.ஏ.பாண்டியன் இந்தத் தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறாா். அவருக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இருக்கும் வரை காவிக்கொடி பறக்காது: முதல்வர் ஸ்டாலின்
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!

மகாராஷ்டிரத்தில் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களுக்கும் கட்டாய பயிற்சி!

போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


