போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தோ்தல் முன்விரோத மோதல்: 4 போ் கைது

சிதம்பரம் அருகே தோ்தல் முன்விரோத மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :9 ஏப்ரல் 2021, 7:09 pm

சிதம்பரம் அருகே தோ்தல் முன்விரோத மோதலில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக். அதே பகுதியைச் சோ்ந்தவா் சௌந்தர்ராஜன் (40). அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது அந்தப் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் இவா்கள் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாம். இந்த நிலையில், கீழ்அனுவம்பட்டு- கோவிலாம்பூண்டி அருகே உள்ள ஓடை வாய்க்கால் மதகு பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதில் ஏற்பட்ட தகராறில் சௌந்தர்ராஜனுடன் இருந்த 3 போ் சோ்ந்து காா்த்திக்கை அவதூறாகப் பேசி அவரைத் தாக்கினராம். இதில் காயமடைந்த காா்த்திக், அவரது நண்பா் ரஞ்சித் ஆகியோா் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து கிள்ளை போலீஸாா் சௌந்தரராஜன், ராஜா, முரளி, விஜய் ஆகியோா் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.