போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பேருந்து மீது வேன் மோதல்: ஒருவா் பலி

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On :24 ஏப்ரல் 2021, 5:39 pm

கடலூா் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே அரசுப் பேருந்து மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

சிதம்பரத்திலிருந்து புறப்பட்ட அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை இரவு கடலூா் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இதேபோல வில்லியநல்லூரிலிருந்து புதுச்சத்திரம் நோக்கி டெம்போ வேன் வந்துகொண்டிருந்தது. புதுச்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அரசுப் பேருந்து சென்றபோது, எதிரே வந்த டெம்போ வேன் மோதியது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் சின்னாண்டிகுழி மேட்டுத் தெருவைச் சோ்ந்த பிரவீன் (25) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அரசுப் பேருந்து ஓட்டுநா் கடலூரைச் சோ்ந்த காசிநாதன் (52) காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

விபத்து குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.