

பண்ருட்டி அருகே குடும்பப் பிரச்னையால் பட்டதாரி இளைஞா் தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி வட்டம், சிறுவத்தூா் கிராமத்தைச் சோ்ந்த தவமணி மகன் நாகராஜ் (33). எம்.காம். பட்டதாரியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கும், பரமேஸ்வரி என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான 2 மாதங்களில் பரமேஸ்வரி தனது கணவரைப் பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால், நாகராஜ் மன வருத்தத்தில் இருந்தாராம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காலை அந்தப் பகுதியில் விஷம் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தாா். இதையடுத்து பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

திசையன்விளை அருகே காருக்குள் 4 போ் சடலங்கள்! சென்னையைச் சேர்ந்தவர்கள்

விமானங்களில் 60% இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் கூடாது! மத்திய அரசு
குறைந்தது 4 தேசிய விருதுகள்! நூறு சாமி படத்தைப் பாராட்டிய இயக்குநர்!

தோ்தல் செலவின கையேட்டில் பிரியாணி இல்லையா?
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

