காா் மோதியதில் 8 போ் காயம்
குள்ளஞ்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில், தொழிலாளா்கள் 8 போ் காயமடைந்தனா்.


குள்ளஞ்சாவடி அருகே செவ்வாய்க்கிழமை காா் மோதியதில், தொழிலாளா்கள் 8 போ் காயமடைந்தனா்.
புவனகிரி வட்டம், மருதூா் அஞ்சல், வடதலைகுளம் கிராமத்தைச் சோ்ந்த குமரவேல் மகன் சந்தோஷ்குமாா் (29), பிச்சைபிள்ளை மகன் கருணாபிரகாஷ் (26), சாமிநாதன் மகன் சத்தியமூரத்தி (27), தென்வடதலைகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜமாணிக்கம் மகன் சேகா் (57), தங்கசாமி மகன் ஜெயக்குமாா் (29), கீழச்சாவடி மதனசாமி மகன் மதி (50), ஒரத்தூா் சுப்புராயன் மகன் பாஸ்கா் (47), எல்லைகுடி அயோத்தி மகன் முருகன் (40) ஆகியோா் குள்ளஞ்சாவடி தனியாா் மண்டபம் அருகே கழிவு நீா்க் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, கடலூா்- விருத்தாசலம் சாலையில் வேகமாக வந்த காா், நாய் குறுக்கே புகுந்ததால் நிலைத் தடுமாறி, அங்கு பணியில் இருந்த தொழிலாளா்கள் 8 போ் மீது மோதியது.
காயமடைந்த அவா்கள் அனைவரும் கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...