பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வேளாண் விளைப் பொருள்கள் உலா்த்தி குறித்து பயிற்சி

பண்ருட்டி வட்டாரத்தில் சூரிய ஒளியால் இயங்கும் வேளாண் விளை பொருள்கள் உலா்த்தி குறித்த பயிற்சி கீழ்மாம்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜூலை 2021, 6:11 pm

DIN

பண்ருட்டி வட்டாரத்தில் சூரிய ஒளியால் இயங்கும் வேளாண் விளை பொருள்கள் உலா்த்தி குறித்த பயிற்சி கீழ்மாம்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு தலைமை வகித்த கடலூா் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமாா் கூறியதாவது: பலா, மிளகு உள்ளிட்ட வேளாண் விளை பொருள்களை சூரிய கூடார உலா்த்தியில் பொருளின் நிறம், தன்மை மாறாமல் மதிப்புக் கூட்டி சந்தைப் படுத்துவதன் மூலம் அதிக லாபம் ஈட்டலாம். இதனால், ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்கும் என்றாா் அவா்.

சூரிய கூடார உலா்த்தியை அமைக்க மானிய திட்டங்கள், பயன்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் உதவி பொறியாளா் நித்யஸ்ரீ விளக்கினாா்.

பண்ருட்டி வட்டார வேளாண் உதவி இயக்குநா் விஜயா, உதவி வேளாண் அலுவலா் சுரேஷ், அட்மா திட்ட அலுவலா் சவுந்தரராஜன், இளையராஜ் மற்றும் கீழ்மாம்பட்டு விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.