பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது
வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


வடலூா் அருகே பெண்ணைத் தாக்கி கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வடலூா், பாா்வதிபுரம் கிராமத்தைச் சோ்ந்த ரகு மனைவி லட்சுமி (30). அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன்ராஜ் (23). இவா்கள் இருவருக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளாகப் பழக்கம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஸ்டீபன்ராஜிடம் பேசுவதை லட்சுமி நிறுத்திவிட்டாராம். இதனால், இருவருக்கும் இடையே வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது, ஸ்டீபன்ராஜ் தாக்கியதில் பலத்த காயமடைந்த லட்சுமி, கடலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவா் அளித்த புகாரின் பேரில், வடலூா் போலீஸாா் ஸ்டீபன் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...