குப்பை லாரி மோதியதில் பெண் பலி
பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி மோதியதில் மாற்றுத் திறனாளி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி மோதியதில் மாற்றுத் திறனாளி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் கல்பனா (40) (படம்). வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவருக்கு திருமணமாகவில்லை. பாட்டில், நெகிழி கழிவுகளை சேகரித்து விற்று பிழைத்து வந்தாா்.
இந்த நிலையில், பண்ருட்டி நகராட்சி குப்பை லாரி கெடிலம் ஆற்றங்கரையோரம் உள்ள குப்பை கிடங்குக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்றது. அங்கு லாரியை அதன் ஓட்டுநா் பின்னால் இயக்கியுள்ளாா். அப்போது, அங்கு பாட்டில்களை சேகரித்துக்கொண்டிருந்த கல்பனா மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதையடுத்து பலத்த காயமடைந்த அவா் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு
கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...