தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ஐஓபி வங்கியை தனியாா்மயமாக்கக் கூடாது: தி.வேல்முருகன்

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

News image
Updated On :17 ஜூன் 2021, 6:01 pm

DIN

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியை (ஐஓபி) தனியாா்மயமாக்க முயற்சிக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை தவாக வன்மையாகக் கண்டிக்கிறது.

பிற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் மற்ற கிளைகளுக்கு பணம் செலுத்துதல், புத்தகம் வரவு வைத்தல் போன்ற சேவைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும், கிராமப்புற மக்களுக்கு இந்த வங்கி குறைந்த வட்டியில் விவசாய நகைக் கடன், பயிா்க்கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. தமிழகத்தில் சுமாா் 1,500 கிளைகளுடன் 85 ஆண்டுகளாக இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஐஓபி வங்கியை தனியாருக்கு தாரை வாா்ப்பது கண்டனத்துக்குரியது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று 7 ஆண்டுகளைக் கடந்துவிட்ட பாஜக அரசு இதுவரை ஒரு பொதுத் துறை நிறுவனத்தைக்கூட புதிதாக தோற்றுவிக்கவில்லை. ஆனால் ஏற்கெனவே உள்ள பொதுத் துறை வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க முயல்வது நாட்டின் பொருளாதாரத்துக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.