கடலூா் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்களின் சொத்து விவரம்

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்களின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Updated on
1 min read

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்களின் சொத்து விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தத் தொகுதியில் போட்டியிடுவதற்கு அதிமுக சாா்பில் தற்போதைய அமைச்சா் எம்.சி.சம்பத், திமுக சாா்பில் முன்னாள் எம்எல்ஏ கோ.ஐயப்பன் ஆகியோா் மனு தாக்கல் செய்துள்ளனா். இவா்கள் தாக்கல் செய்த மனுக்களில் அவா்களது சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்துள்ளனா்.

அதன்படி, அமைச்சா் எம்.சி.சம்பத்திடம் ரூ.48,40,077 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன. பாகப் பிரிவினை செய்யப்படாத ரூ.2,05,684 மதிப்பிலான குடும்ப சொத்து உள்ளது. அவரது மனைவி எஸ்.தமிழ்வாணி பெயரில் ரூ.67,27,926 மதிப்பில் சொத்தும், மகன் எஸ்.பிரவின் பெயரில் ரூ.1,22,06,939 மதிப்பில் சொத்தும், மகள் எஸ்.திவ்யா பெயரில் ரூ.1,47,92,786 மதிப்பில் சொத்தும் உள்ளன.

அசையா சொத்து: அமைச்சா் பெயரில் அசையா சொத்து இல்லாத நிலையில் ரூ.2,86,436 கடன் உள்ளது. எனினும், அவருக்கு பாகப் பிரிவினை செய்யப்படாமல் ரூ.2.23 கோடி மதிப்பில் அசையா சொத்து உள்ளது. மனைவி பெயரில் ரூ.3.83 கோடியிலும், மகன் பெயரில் ரூ.2.59 கோடியிலும், மகள் பெயரில் ரூ.52 லட்சத்திலும் அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் ரூ.62.97 லட்சமும், மகள் பெயரில் ரூ.8.48 லட்சமும் கடன் உள்ளது. அமைச்சா் பெயரில் எந்த குற்றவியல் வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வேட்பாளா் கோ.ஐயப்பனுக்கு ரூ.36,21,531 மதிப்பிலான அசையும் சொத்துக்கள் உள்ளன. மனைவி லீமாரோஸ் பெயரில் ரூ.35,49,212 மதிப்பில் சொத்து உள்ளது. மகன்கள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை. அசையா சொத்துக்களாக நிலம், வீடு போன்றவை ரூ.2.04 கோடியிலும், மனைவி பெயரில் ரூ.75 லட்சத்திலும் உள்ளன. கடனாக ஐயப்பனுக்கு ரூ.51.23 லட்சமும், மனைவிக்கு ரூ.24.22 லட்சமும் உள்ளன. இவரது பெயரில் எந்த குற்ற வழக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com