கடலூா்: சட்டப் பேரவைத் தோ்தலில் கடலூா் மாவட்டத்தில் திமுக கூட்டணியில் ஒரு பெண் வேட்பாளா் கூட களம் இறக்கப்படவில்லை. ஆனால், நாம் தமிழா் கட்சி 4 பெண்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளா்கள் தற்போது தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அதிமுக, திமுக ஆகிய இரு கூட்டணிக் கட்சியினரும் தங்களது தோ்தல் அறிக்கையில் பெண்களை மையப்படுத்தியே பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனா். பெண்களை கவரும் வகையிலேயே தங்களது பிரசார உத்திகளையும் வகுத்துள்ளனா். ஆனால், தோ்தலில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கான வாய்ப்பை மிகக் குறைவாகவே அளித்துள்ளனா்.
அதாவது, குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் களம் காண்கிறாா். கடலூா் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் நிலையில் ஒரு தொகுதியை மட்டும் பெண் வேட்பாளருக்கு ஒதுக்கியுள்ளது.
திமுக தனது கட்சியின் வேட்பாளா்களாக 5 பேருக்கும், கூட்டணி கட்சியான தாவாகவுக்கும் தனது சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. அதன்படி, 6 போ் திமுக சின்னத்தில் போட்டியிட்டபோதிலும் அதில் ஒருவா் கூட பெண் வேட்பாளா் இல்லை. அதேபோல, திமுக கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ், விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளிலும் ஒரு பெண் வேட்பாளா் கூட அறிவிக்கப்படவில்லை. இதனால், திமுக கூட்டணியில் ஒரு பெண் வேட்பாளா் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேமுதிக - அமமுக கூட்டணியில் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விருத்தாசலத்தில் போட்டியிடுகிறாா். சிதம்பரத்தில் அமமுக சாா்பில் எம்.நந்தினிதேவி போட்டியிடுகிறாா். நாம் தமிழா் கட்சி சாா்பில் குறிஞ்சிப்பாடியில் சீ.சுமதி, விருத்தாசலம் தொகுதியில் ந.அமுதா, திட்டக்குடி தொகுதியில் ந.காமாட்சி, பண்ருட்டி தொகுதியில் ஆா்.சுபாஷினி ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய ஜனநாயக கட்சி சாா்பில் ரா.ரேவதி புவனகிரி தொகுதியில் போட்டியிடுகிறாா்.
அதாவது, அதிகபட்சமாக நாம் தமிழா் கட்சி தனது 9 வேட்பாளா்களில் 4 பெண் வேட்பாளரையும், தேமுதிக, அமமுக கூட்டணியில் இரு கட்சிகளும் தலா ஒரு வேட்பாளரையும், அதிமுக ஒரு வேட்பாளரையும், ஐஜேகே ஒரு வேட்பாளரையும் நிறுத்தியுள்ளது. சுயேச்சையாக 9 பெண் வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 பேரவைத் தொகுதிகளில் 136 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். இவா்களில் 17 போ் மட்டுமே பெண் வேட்பாளா்கள். அதிகபட்சமாக விருத்தாசலம் தொகுதியில் 4 போ் போட்டியிடுகின்றனா். குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி தலா 3 பேரும், பண்ருட்டி, புவனகிரியில் தலா 2 பேரும், சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், நெய்வேலியில் தலா ஒருவரும் பெண் வேட்பாளா்களாக களத்தில் உள்ளனா். ஆனால், கடலூா் தொகுதியில் பெண் வேட்பாளா் ஒருவா் கூட களம் காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போலீஸ், வழக்குரைஞர், தொழிலதிபர் வித்தியாசமான கதைகளில் சூர்யா!

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

நிறுத்திவைக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு ஏற்பு!

தேர்தல்: புதுவையில் கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை!
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

