போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 14 அடி நீள முதலையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

News image
Updated On :21 மே 2021, 6:30 pm

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கிராமத்துக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 14 அடி நீள முதலையை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை பிடித்தனா்.

சிதம்பரம் அருகே உள்ள சிவாயம் கிராமத்துக்குள் வியாழக்கிழமை நள்ளிரவு 14 அடி நீள முதலை புகுந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை இதைப் பாா்த்த பொதுமக்கள் சிதம்பரம் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, வனக்காப்பாளா் அனுசுயா மற்றும் வனக்காவலா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று 400 கிலோ எடை கொண்ட 14 அடி நீள முதலையைப் பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி நீா்த்தேக்க குளத்தில் பாதுகாப்பாக விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.