கடலூர் மாவட்டத்தில் 21,46,960 வாக்காளர்கள்

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 
கடலூர் மாவட்டத்தில் 21,46,960 வாக்காளர்கள்

கடலூர் மாவட்டத்திற்கான 2022 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வெளியிடப்பட்டது. 

மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்பிரமணியம் 9 சட்டப் பேரவை தொகுதிக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி மாவட்டத்தில் 21,46,960 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 10,56,480 பேர், பெண்கள் 10,90,235 பேர், இதரர் 245 பேர்களாவர்.

சட்டப் பேரவை தொகுதி வாரியாக:
திட்டக்குடி (தனி)- 2,19,038
விருத்தாசலம்- 2,52,342
நெய்வேலி - 2,18,823
பண்ருட்டி- 2,46,165
கடலூர்- 2,40,311
குறிஞ்சிப்பாடி -2,43,241
புவனகிரி- 2,48,988
சிதம்பரம்- 2,49,884
காட்டுமன்னார்கோயில் (தனி)- 2,28,168.

இதனை முன்னிட்டு வரும் 30 ஆம் தேதி வரையில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தலுக்கான மனுக்களை அந்தந்த வாக்குச் சாவடியில் அளிக்கலாம். நவ.13, 14 மற்றும் 27,28 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com