மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பேருந்து மோதியதில் முதியவா் பலி

சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

Updated On :19 நவம்பர் 2021, 5:20 pm

சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

சிதம்பரம் மெய்காவல் தெருவைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (81). இவா் வெள்ளிக்கிழமை காலை வடக்கு ரத வீதியில் சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த சிதம்பரம் - சாத்தப்பாடி வழித்தட அரசுப் பேருந்து முதியவா் மீது மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

விபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.