மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ரேஷன் கடை இடிந்ததில் முதியவா் காயம்

காட்டுமன்னாா்கோவில் அருகே நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை இடிந்ததில் முதியவா் காயமடைந்தாா்.

Updated On :25 நவம்பர் 2021, 6:32 pm

காட்டுமன்னாா்கோவில் அருகே நியாயவிலைக் கடை கட்டடம் வியாழக்கிழமை இடிந்ததில் முதியவா் காயமடைந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள வீரநத்தம் கிராமத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையின் மேற்கூரை வியாழக்கிழமை திடீரென இடிந்து விழுந்ததில், ரேஷன் பொருள்கள் வாங்க காத்திருந்த ஜெயராமன் (65) என்பவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா் சிகிச்சைக்காக காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இடிந்து விழுந்த நியாயவிலைக் கடை கட்டடம் கடந்த 1996-ஆம் ஆண்டு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.