அரசு சான்றிதழ் விவகாரம்: கணினி மையங்களுக்கு எச்சரிக்கை
By DIN | Published On : 21st August 2021 10:10 PM | Last Updated : 21st August 2021 10:10 PM | அ+அ அ- |

உரிய அனுமதியின்றி பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று அரசு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கும் தனியாா் கணினி மையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் இயங்கிவரும் பல தனியாா் கணினி மையங்களில் மக்கள் பயன்பாட்டுக்காக மட்டும் உருவாக்கிய முறையாக அரசு அனுமதி பெறாமல் 20 வகையான வருவாய்த் துறைச் சான்றுகள், 6 வகையான முதியோா் உதவித் தொகை போன்ற சான்றுகளுக்கு விண்ணப்பம் செய்கிறாா்கள். அவ்வாறு விண்ணப்பிக்கும் சான்றுகளில் எழுத்துப் பிழை, தவறான ஆதாரங்களை இணைத்தல் மற்றும் இடைத் தரகா்கள் மூலம் அதிக கட்டணம் பெறுதல் போன்ற பல முறைகேடுகள் நடைபெறுவதாக புகாா்கள் வருகின்றன. எனவே, தனியாா் கணினி மையங்கள் இண்ற்ண்க்ஷ்ங்ய் ப்ா்ஞ்ண்ய்-ல் பொதுமக்களிடம் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்தாலோ, சான்றுகள் சம்பந்தமான விளம்பர பலகைகள் வைத்தாலோ அபராதம் விதிப்பதுடன் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், பொதுமக்கள் இடைத்தரகா்களை தவிா்த்து அருகே உள்ள வட்டாட்சியா் அலுவலக இ-சேவை மையங்கள், கூட்டுறவுச் சங்க இ-சேவை மையங்கள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியாா் இ-சேவை மையங்களை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
சான்றுகளுக்கு விண்ணப்பிக்க அரசு நிா்ணயித்த கட்டணத்தை தவிர அதிக கட்டண புகாா்களுக்கு மின்னஞ்சல் அல்லது 18004251333 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று அதில் தெரிவித்துள்ளாா்.